Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா

வியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும் அமெரிக்கா
, ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (13:52 IST)

வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான 'ஆரஞ்ச்' எனப்படும் ரசாயணத்தை அந்நாடு சேமித்து வைத்திருந்தது.
 

வியட்நாம் போர் முடிந்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இந்த பத்தாண்டு திட்டத்தை 183 மில்லியன் டாலர்கள் செலவில் அமெரிக்கா தொடங்கியுள்ளது.

வியட்நாமில் ஹோ சி மின் நகரத்திற்கு வெளியே உள்ள பியன் ஹோ விமான நிலையத்தில் உள்ள விமானத்தளம், அந்நாட்டிலேயே மிக மோசமான, அதாவது நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட விமான நிலையமாகும்.

காடுகளை அழிக்கவும், அதனால் அங்கு மறைந்திருந்த எதிரிகளை கண்டுபிடிக்கவும், அமெரிக்கப்படைகள் இந்த 'ஆரஞ்ச்' ரசாயனத்தை தெளித்தனர்.

இதனால் 1,50,000 குழந்தைகள் கடுமையான பிறப்பு குறைபாடுகளோடு பிறந்ததோடு பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாக வியட்நாம் கூறுகிறது.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை: தேர்தல் அதிகாரி அதிரடி: எத்தனை வாக்குச்சாவடி? எந்தெந்த ஊர்?