Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஜிடல் தொழில்நுட்பத்தை கணித்த ஆல்வின் டாஃப்லர் மரணம்

டிஜிடல் தொழில்நுட்பத்தை கணித்த ஆல்வின் டாஃப்லர் மரணம்
, வியாழன், 30 ஜூன் 2016 (21:49 IST)
டிஜிடல் தொழில்நுட்பத்தால் உலக அளவில் ஏற்படும் பெரும் மாற்றத்தைக் கணித்தவரான, தொழில்துறை வளர்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் குருவாகக் கருதப்படுபவருமான ஆல்வின் டாஃப்லர் மரணமடைந்தார்.


 

 
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் திங்கட்கிழமை அவர் காலமாகிவிட்டதாக அவரது ஆலோசனை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 87.
 
ஆல்வின் டாஃப்லர் கடந்த 1970-ம் ஆண்டு, தனது மனைவி ஹெய்டியுடன் இணைந்து, எதிர்கால அதிர்ச்சி (Future Shock) என்ற புத்தகத்தை வெளியிட்டார். உற்பத்தித் துறையில் இருந்து, கம்ப்யூட்டர் சார்ந்த தகவல் பொருளாதாரத்துக்கு இந்த சமூகம் மாறும் என்பதை அதில் கணித்திருந்தார். அந்த மாற்றங்கள், சில நேரங்களில், மலைக்க வைப்பதாக இருந்தாலும் கூட, மனித சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்று அவர் அந்த நூலில் தெரிவித்திருந்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருசக்கர வாகனத்தில் 108 ஆம்புலன்ஸ் முதலுதவி சேவை தொடக்கம்