Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே பிரசவத்தில் 3 ஆண், 3 பெண் குழந்தைகள் பெற்ற பெண்

Advertiesment
இலங்கை
, வியாழன், 21 அக்டோபர் 2021 (23:40 IST)
இலங்கையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் அடங்கும்.
 
இப்படியொரு பிரசவசம், இலங்கை மருத்துவ வரலாற்றில் முன்னெப்போதும் பதிவாகவில்லை என்று தெரிய வருகிறது.
 
அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்கை மூலம் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
 
இலங்கை குழந்தைகள்
 
கொழும்பிலுள்ள 'நைன்வெல்ஸ்' (Ninewells) எனும் தனியார் வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவைக் கடந்த வேலையில் இரவு 12.16க்கும் 12.18க்கும் இடைப்பட்ட நேரத்தில் பிறந்துள்ளதாக பிபிசி தமிழுக்கு அந்த வைத்தியசாலையின் சிரேஷ்ட செயற்பாட்டு முகாமையாளர் சுதந்த பீரிஸ் தெரிவித்தார்.
 
இவற்றில் எடை கூடிய குழந்தை 1.6 கிலோகிராம் கொண்டது என்றும், எடை குறைந்த குழந்தை 870 கிராமுடனும் இருந்ததாக அவர் கூறினார்.
 
பேராசிரியர் டொக்டர் டிரான் டயஸ் தலைமையில் குறித்த தாய்க்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட செயற்பாட்டு முகாமையாளர் குறிப்பிட்டார்.
 
தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிஎஸ்இ பாடத்திட்டம்: இந்திக்கு முக்கியத்துவம்- முதல்வர் கண்டனம்