கடந்த இருபது ஆண்டுகளாக வெனிசுவேலா நாட்டில் பெட்ரோல் விலை என்பது கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்பதாகவே இருந்து வந்தது.
அங்கே ஒரு காரின் பெட்ரோல் டாங்கியை நிரப்பத்தேவையான பெட்ரோலின் விலை ஒரு பாட்டில் குடிதண்ணீரின் விலையைவிட குறைவாக இருந்தது.
ஆனால், இப்போது பெட்ரோலின் விலை 6000 % அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது சிறப்பு முதல்தர பெட்ரோலின் விலை அமெரிக்காவின் ஒரு செண்டுக்கு நிகராக இருந்து வந்தது. ஆனால், இன்று அது ஒரு டாலராக அதிகரித்துள்ளது.
வெனிசுவேலாவின் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அண்மையில் ஏற்பட்ட பெட்ரோலிய விலை வீழ்ச்சியால் அது கடுமையாக அடிவாங்கியது. அதை சமாளிக்கவே இந்த வரலாறு காணாத விலையேற்றம் என்கிறது அரசு.
மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த விலையுயர்வை ஆதரிக்கிறார்கள். ஆனால் அரசின் இந்த விலையேற்றம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இது உதவாது என்றும் விமர்சிக்கிறார்கள்.