Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்

வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்
, வியாழன், 30 ஏப்ரல் 2015 (18:59 IST)
வியட்நாம் போரின்போது காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை அமெரிக்கா இழைத்தது என வியட்நாமின் பிரதமர் வியன் தன் ஷோங் கூறியுள்ளார்.


 
அந்தப் போர் முடிவடைந்து நாற்பது ஆண்டுகள் ஆவதை குறிக்கும் நினைவு நிகழ்வின்போது ஆற்றிய உரையிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
 
வியட்நாம் மக்களுக்கு அந்தப் போரின்போது அமெரிக்கா கணக்கிட முடியாத இழப்புகளும், சொல்லொணாத் துயரங்களையும் ஏற்படுத்தினர் என்று அந்த உரையில் அவர் கூறினார்.

webdunia


போர் காலத்தில் சைகான் என்றும் இப்போது ஹோ சி மின் சிட்டி என்றும் அழைக்கப்படும் நகரில் போர் முடிவுக்கு வந்ததைக் குறிக்கும் நாற்பதாம் ஆண்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

webdunia


கம்யூனிஸ்ட் துருப்புக்கள் சைகான் நகரை 1975ஆம் ஆண்டு கைப்பற்றியதை அடுத்து போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
இப்போது அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையே நல்லுறவு உள்ளது, பரந்துபட்ட பல துறைகளில் ஒத்துழைப்பும் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. 
 
வியட்நாம் போர் ஒரு பார்வை
 
1954- வியட்நாமை வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கும் ஒப்பந்தம் ஜெனீவாவில் கையெழுத்தானது. 
 
இதையடுத்து கம்யூனிஸ வடக்கு, தென் பகுதியில் அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவு அளித்தது.
 
1964- வடக்கு வியட்நாமிலுள்ள இலக்குகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சுகளை நடத்தியது.
 
1965- அமெரிக்காவிலிருந்து இராணுவத்தினர் வியட்நாமை வந்தடைந்தனர்.
 
1973- "போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை மீண்டும் ஏற்படுத்தும்" ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்தாகிறது. இதையடுத்து வடக்கு தெற்கு வியட்நாமில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு முடிவுக்கு வருகிறது. எனினும் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமுக்கு இடையே போர் தொடருகிறது.
 
30 ஏப்ரல் 1975- வடக்கு வியட்நாம் துருப்புக்கள் கம்யூனிஸ்ட் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு வியட்நாமிலுள்ள சைகான் நகருக்குள் நுழைந்து நகரைக் கைப்பற்றுகிறது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்து நாடு மீண்டும் இணைக்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil