Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

300 யுக்ரேனியர்கள் கலேஸில் இங்கிலாந்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்

Advertiesment
300 யுக்ரேனியர்கள் கலேஸில் இங்கிலாந்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்
, செவ்வாய், 8 மார்ச் 2022 (09:11 IST)
பிரான்சின் கலேஸிலிருந்து இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற சுமார் 300 யுக்ரேனியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். உள்துறை அலுவலகத்தால் இதுவரை வழங்கப்பட்ட யுக்ரேனிய விசாக்களின் மொத்த எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையாகும்.


பல அகதிகள் பிரான்சில் இருந்து கலேஸ் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு எல்லையை கடக்க முற்படுகின்றனர். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 589 பேர் அங்கு வந்துள்ளனர் என்று கலேஸின் துணை அரசியல் தலைவர் வெரோனிக் டெப்ரெஸ்-போடியர் தெரிவித்தார். 286 பேர் இங்கிலாந்து அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இது சமந்தமாக கலேஸில் உள்ள யுக்ரேனியர்கள் சிலர் பிபிசியிடம் பேசுகையில் குடும்ப ரீயூனியன் விசா பெறுவதற்கு ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய உள்ளது. ஆனால், உள்துறை அலுவலகம் ஐரோப்பா முழுவதும் விசா விண்ணப்ப மையங்களில் இந்த வாரம் சந்திப்பு நேரம் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

"இங்கே மக்கள் விசா பெறுவதற்கு இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை ஏற்படுத்தலாம் " என்று டிப்ரெஸ்-போடியர் என்ற நபர் பிபிசியிடம் கூறினார்.

"இங்கே மக்கள் விசா பெறுவதற்கு இன்னும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவை ஏற்படுத்தலாம் " என்று டிப்ரெஸ்-போடியர் என்ற நபர் பிபிசியிடம் கூறினார்.

யுக்ரேனிய குடும்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 17,700 பேர் இங்கிலாந்துக்கு வர விண்ணப்பித்துள்ளனர், மேலும் 300 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கட்கிழமை அன்று கூறியபோது, பிரிட்டன் "மிகவும் தாராளமான நாடு". ஆனால் எங்கள் நாட்டிற்குள் வருபவர்கள் யார் என்பதை நாங்கள் தீர ஆராய விரும்புகிறோம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர்! – அதிர்ச்சியில் இந்தியா!