ஜெய் ஸ்ரீ ராமரும்; சாகிருதீன் பாபரும்!!

சனி, 9 நவம்பர் 2019 (10:08 IST)
(இந்த கட்டுரை இரா காஜா பந்தா நவாஸ் என்பவரின் தனிப்பட்ட கருத்தாகும்)
இந்திய வரலாறு ஒரு முக்கியமானத் தீர்ப்பை (அயோத்தி வழக்கு) நோக்கி காத்திருக்கிறது.

 
இந்த வழக்கு ஸ்ரீ மான் ராமனுக்கும், பாபருக்கும் ஆன வழக்கு அல்ல ! இது இரு மதங்களுக்கு இடையேயான வழக்கும் அல்ல ! ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கும், சன்னி வக்ப் வாரியத்துக்கும் ஆன சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் ? என்ற வழக்கு. 
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களின் தொடர் அலர்ட்டுகள், மீடியாக்களின் ஒளி வெளிச்சம் என இந்த வழக்கு மேலும் கவனம் பெறுகிறது. 
 
ஜெய் ஸ்ரீ ராம் ! என மேடைகளில் கோஷம் போட்டு ஆட்சியைப் பிடித்தவர்களின் ஆட்சி இது. இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று திசைகளில் பயணிக்க வல்லது.
 
திசை 1 :
இந்த வழக்கின் தீர்ப்பு முஸ்லீம் வக்ப் வாரியத்துக்கு சாதகமாக வரும் ஆயின், ஜெய் ஸ்ரீ ராம்! என்ற கோஷம் வட இந்தியா முழுவதும் ஒலிக்கும். அந்த கோஷத்தில் பாஜக குளிர் காயலாம். முஸ்லீம்கள் தாக்கப்படலாம் /கொல்லப்படலாம் என்ற அச்சம் உள்ளது/நிலவுகிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை, மக்கள் பிரச்சனைகள் என அனைத்தும் மறக்கப்படலாம். அயோத்தி தொடர்ப்பான அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க தயாராக்கலாம். இந்துக்களின் உரிமைகளைக் காப்போம் என்று ஒரு கூட்டம் கிளப்பலாம். மோடியும், ஷாவும், இந்துக்களின் ஆதர்ஷ நாயக்கன் ஆக்கப்படலாம்.
 
திசை 2 :
இந்த வழக்கின் தீர்ப்பு ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு சாதகமாக வரும் ஆயின், முஸ்லீம்கள் ஆங்கங்கே உணர்வுப் பூர்வமாக்க சிலப் போராட்டங்களில் ஈடுபடலாம். அப்போது முஸ்லீம்கள் தாக்கப்படலாம். இறுதியாக தீர்ப்பு என்பது இறைவன் நமக்கு தருவது; மனிதர்கள் தருவது அல்ல; என்று இந்த தீர்ப்பை ஏற்று கொள்வார்கள்.
 
திசை 3 :
இந்த வழக்கில், வழக்குத் தொடர்ந்தவர்கள் அனைவர்க்கும் நிலம் சரியாக பகிர்ந்து வழங்கப்படும்மாயின், அது அயோத்தியின் தீர்க்க தரிசனம். நூற்றாண்டு வழக்கின் தீர்ப்பு அரை நொடியில் வழங்கப்படலாம். அயோத்தி என்பது இந்தியர்கள் அனைவருக்கும் ஆன பூமி. ராமரின் பெயராலும், பாபரின் பெயராலும், இந்த தேசத்தில் நடத்தப்பட்ட நரப்பலிக்கள் போதும். இனியும் இந்த நரப்பலிக்கள் தொடருமாயின், தேசம் தனக்கான இடத்தை இழந்து விடும். 
 
உண்மையில் ஸ்ரீ மான் ராமரும், பாபரும் எழுந்து வருவார்கள் ஆனால் ! இருவரும் ஆரத் தழுவி கொள்வார்கள். ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.

 
         (இரா காஜா பந்தா நவாஸ்)

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒரு நண்டு 33 லட்சமா? ஜப்பானில் ஆச்சர்யம்!