Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மிதுனம்)

Advertiesment
குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மிதுனம்)
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (12:58 IST)
மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின்  பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும்,  ஒன்பதாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: நல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் மிதுன ராசி அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு  மாறும். தொழிலும் ஏற்றம் உண்டாகும்.
 
குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்சனைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்சனைகள் இருந்திருக்கும். அதிலும்   முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.
 
தொழில் செய்பவர்கள் காரியங்களை நீங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரையத்தையும் குறைக்கலாம். புதிய தொழில்  தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத்  தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.
 
பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி  மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள்.
 
கலைத்துறையினர் இந்த காலகட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இருக்கும்.
 
மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில்  வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பழமையான கோயில் ஒன்றுக்குச் சென்று வருவீர்கள். புதிய  வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு யோகமான கால கட்டம்.
 
திருவாதிரை: இந்த குரு பெயர்ச்சியில்  ஓயாது உழைக்க வேண்டி வரலாம். உடல் நலனில் சற்று கவனம் தேவை. கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு  வாகனத்தை பிரயோகிக்க வேண்டாம். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது அவசியமாகிறது.
 
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில்  தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது உத்தமம். முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது  நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும்.
 
பரிகாரம்: மாதந்தோறு, சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (ரிஷபம்)