Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி

Advertiesment
2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி
, திங்கள், 14 டிசம்பர் 2020 (13:26 IST)
புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே ! இந்த ஆண்டு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி  வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள்.


புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள்  கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள்  உண்டாகி நீங்கும்.  நற்பலன்கள் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும்.  எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த  காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
 
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி  ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வமான அறிவுதிறன்  கூடும். முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக  செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளுக்காக  செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.உறவினர்கள் வருகை மகிழ்ச்சி  தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். சந்தோஷமான நிலை காணப்படும். 
 
பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த  காரியங்கள் சாதகமாக முடியும்.
 
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து  கொள்வார்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப்பலன்களையும்  அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.
 
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான  சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப்  பெறுவீர்கள். 
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும்.  ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.
 
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த வருடம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு  பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம்  காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.  பணவரத்து திருப்திதரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். 
 
அஸ்தம்:
இந்த வருடம் எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும்  முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.
 
சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம்  உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். 
 
பரிகாரம்: குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்
அனுகூலமான திசைகள்: மேற்கு, தெற்கு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்