Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - சிம்மம்

Advertiesment
2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - சிம்மம்
, புதன், 27 டிசம்பர் 2017 (13:18 IST)
இந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. இல்லத்திற்குத்  தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். நெடுநாளாக கருத்தரிக்காமல் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில்  கருத்தரிப்பார்கள்.
நீடித்து வந்த நோய்கள் முழுமையாக குணமடைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய ஆலய நிர்மாண வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். தேவைக்குமேல் பணம் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். பொழுதுபோக  சுற்றுலா சென்று வருவீர்கள். உங்கள் பகுத்தறியும் திறன் கூடும். மனஉணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்கள் புதுமைகளாக மலரும். புதிய படைப்புகளை வாங்குவீர்கள். குடத்தில் இட்ட விளக்காக காரியமாற்றி வந்தவர்கள் குன்றின்மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். நேர்மையான செயல்களால்  வீட்டிலும் வெளியிலும் நீதியைக் காப்பாற்றுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கும் காலகட்டமிது என்றால்  மிகையாகாது.
 
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிட்டு நற்பெயர் எடுப்பர். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பர். சிலநேரங்களில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணவரவுக்கு தடைகள் வராது.  ஊதிய உயர்வினைப் பெறுவர். மேலதிகாரிகள் முழுமையான ஆதரவைத் தரும் ஆண்டாக இது அமைகிறது. 
 
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வர். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது  என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும்.
 
கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவர்.  ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர்.
 
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டு. வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பர். மேலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால்  பேச்சில் நிதானம் தேவை.
 
மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் பாராட்டும் பெற்று மகிழ்வர். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சிகள் எடுத்து படிக்கவும். விளையாட்டினால் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக்  கொள்வர்.
 
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க  மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு அமவாசை தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி  நடக்கும். கிழக்கு, வடக்கு திசைகள் அதிர்ஷ்டம் தரும். சூரியன் - புதன் - குரு ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும்  தங்கு தடையில்லாமல் காரியங்கள் நடந்து முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கடகம்