Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத ராசிபலன்கள்: கடகம்

Advertiesment
அக்டோபர் மாத ராசிபலன்கள்: கடகம்
, ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (17:30 IST)
கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு பிறர் மனம் கவர்ந்திடும் கடக ராசி அன்பர்களே


இந்த மாதம் மனசஞ்சலம் நீங்கி அனுகூலம் தரும் வகையில் அனைத்து விசயங்களும் இனிதே நடைபெறும். நீங்கள் பேசும் வார்த்தைகள் பிறரை கவர்ந்து உங்கள் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வழிவகை பிறக்கும். உங்களுக்கு நல்லவர்கள் மற்றும் மகானளின் தரிசனம் கிடைக்கச் செய்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் உங்களையும் இடம்பெறச் செய்வார்.

குடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. நிலத்தின் அருகிலுள்ள கிராம தேவதையை வழிபட்டு சிரமங்களை குறைக்கலாம்.

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு மனைவியின் பெயரால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம்.

தொழிலதிபர்கள் தொழில் வளம் பெற புதிய அனுகூலமான செய்திகள் தேடி வரும். சுய தொழில் புரிவோர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தேவையான அளவு ஆதாயத்தை சம்பாதிக்கலாம். பொருளாதார அபிவிருத்தி உண்டு. சிறு சிறு தடங்கள்களால் மனச்சோர்வு ஏற்பட்டாலும் வெற்றி கிட்டும் பொழுது அது சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.

பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள். பொருள்கள் வைத்த இடம் பற்றிய குறிப்புகள் இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் வாழ்க்கை முறையை நன்கு நடத்தலாம். வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.  தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்கள் முக்கிய வாய்ப்புகளில் நல்ல முடிவு கிட்டும். மக்களின் நன்மதிப்பை பெற்று புகழின் எல்லைக்கு சென்று மகிழ்ச்சியில் திளைக்கலாம். குருவுக்கும், சிஷ்யருக்குமான உறவு நல்முறையில் இருக்கும். நண்பர்கள் மத்தியில் தேவையில்லாத பேச்சுகளை குறைத்தால் பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம்.நற்செய்திகள் தேடிவரும்.

அரசியல்வாதிகள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு சில சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றி பேசி தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் ஆகையால் எக்காரியத்திலும் நிதானம் தேவை. புரியாத விசயங்களை சிறிது நாட்கள் ஒத்திப் போடுவது நன்மையைத் தரும்.  

மாணவர்கள் தங்கள் படிப்பில் இலகுவான பயிற்சி முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதால் புதிய சிரமங்கள் உண்டாகலாம். கவனமுடன் செயல்பட்டு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் கணவன் - மனைவியரிடேயே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும்.

பூசம்:
இந்த மாதம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும்.  மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.

ஆயில்யம்:
இந்த மாதம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.

பரிகாரம்: குபேரன் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதாலும், வடக்கு நோக்கி குபேர திசையை வணங்குவதாலும் விரும்பிய பொருளாதாரம் பெற்று நல் வழியில் வாழலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன்
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத ராசிபலன்கள்: மிதுனம்