Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Advertiesment
தனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள்
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்): சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே! 
இந்த மாதம் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியமும் கிட்டும். வீடு, மனை வாங்கும் யோகம் யாவும் சிறப்பாக அமையும்.
 
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த தடைகள், போட்டிகள், முன்னேற்றமற்ற நிலை போன்ற யாவும் விலகி நல்ல மேன்மை உண்டாகும். லாபத்தையும் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.
 
உத்யோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சம்பள பாக்கிகள் யாவும் உத்தியோகஸ்தர்களுக்குக் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
 
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
 
அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.
 
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணப்பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.
 
மாணவர்கள் கல்வியில் நல்ல மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள்.
 
மூலம்: இந்த மாதம் உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.
 
பூராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள் சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.
 
உத்திராடம் - 1: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும்.
 
பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Oct 25, 26
 
சந்திராஷ்டம தினங்கள்: Oct 31; Nov 01.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருச்சிகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்