Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே மாத ஜோதிட பலன்கள் 2021: விருச்சிகம்

மே மாத ஜோதிட பலன்கள் 2021: விருச்சிகம்
கிரகநிலை: ராசியில் கேது - தன ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு (அதி. சா) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
தேனீக்கள் போல் எப்போது சுறுசுறுவென்று இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.  அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். 
 
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
 
விசாகம்:
இந்த மாதம் தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். புதிய தொழில்  ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். 
 
அனுஷம்:
இந்த மாதம் உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். 
 
கேட்டை:
இந்த மாதம் பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும்  மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். 
 
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே மாத ஜோதிட பலன்கள் 2021: துலாம்