Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 2022 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

Advertiesment
மே 2022 மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்
, சனி, 30 ஏப்ரல் 2022 (14:25 IST)
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

 
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹு, சூர்யன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றம்:
மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார்.
மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
 
பலன்:
அனுபவ ஞானத்தைக் கொண்டும் சமயோசித சாமர்த்தியத்துடன் செயலாற்றி காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.
 
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். 
 
பெண்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். 
 
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 
 
அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
 
மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.
 
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்
 
அனுஷம்:
இந்த மாதம் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.  பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம்.
 
கேட்டை:
இந்த மாதம்  வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்:  வியாழக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் தாயாரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 05, 06
அதிர்ஷ்ட தினங்கள்: மே 17, 18

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 2022 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்