Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

Advertiesment
மே மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:05 IST)
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

பிறர் போற்றலையும், தூற்றலையும் பொருட்படுத்தாது தனக்கென்று தனிப் பாதை வகுத்து செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கப் பெற்று சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல ஞானம் உண்டாகும்.  

குடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாய கிடைக்கும். புத்திரர்கள் தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள். சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.

தொழிலதிபர்கள் சுக சவுகரிய வாழ்க்கையை பெறும் வகையில் தொழில் அமையும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வீட்டில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தந்தையின் தொழில் புரிபவர்கள் அவரைப்பின்பற்றி புதிய மிடுக்கான தோற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப்  பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். அதனால் ஆதாயமே. நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.

அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும். 

மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நண்பர்களுடான பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வைப்பது நலம் தரும். சாலைகளில் வாகனங்க்ளில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

அனுஷம்:
இந்த மாதம் வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது. பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள்.

கேட்டை:
இந்த மாதம் சுபவிரயங்கள் உண்டாகலாம். தங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30
பரிகாரம்: செவ்வரளி மாலை சாற்றி செவ்வாய் தோறும் முருகனை வழிபடவும். நடராஜர் சன்னதியில் உள்ள பதஞ்சலி மகரிஷியை உரிய முறையில் வழிபடுவதால் நலமுடன் வாழலாம்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்