ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
அடுத்தவரின் உதவியை எதிர்பார்க் காத ரிஷப ராசியினரே நீங்கள் பிரச்சனை யை கண்டு பயப்படமாட்டீர்கள். இந்த மாதம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.
அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
கார்த்திகை - 2, 3, 4:
இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
ரோகினி:
இந்த மாதம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.
மிருகசீரிஷம் - 1, 2:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: பவுர்ணமி அன்று நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29