Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

Advertiesment
மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்
, ஞாயிறு, 1 மார்ச் 2020 (14:48 IST)
சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)


கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில்  புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் -  அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-03-2020 அன்று மாலை 6.59 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று காலை 4.20 மணிக்கு  குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-03-2020 அன்று மாலை 3.26 மணிக்கு சனி பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-03-2020 அன்று காலை 6.16 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எதையும் தாங்கும் இதயம் என்பதுக்கேற்றார் போல் எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.  எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட  குறையலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும்  வரலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக  பேசுவது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

மகம்:
லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

பூரம்:
தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நேரம். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்:
முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்

பரிகாரம்:  சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோபலம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்