Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்மம் - தை மாதப் பலன்கள்

Advertiesment
சிம்மம் - தை மாதப் பலன்கள்
, திங்கள், 14 ஜனவரி 2019 (16:15 IST)
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) - கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், குரு  - சுக ஸ்தானத்தில் சந்திரன்  - பஞ்சம  பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சனி - ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது, சூர்யன்- அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராகு ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: இந்த மாதம் உங்களுக்கு சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து  கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட  நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.
 
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும்  திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற  விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.
 
குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள்  நீங்கும்.
 
பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம்  நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான  சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.
 
அரசியல் துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும்  கூடும். உழைப்பு வீண் போகாது.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
மகம்: இந்த மாதம் பெண்கள் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில்  சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும்.
 
பூரம்: இந்த மாதம் எந்த சூழ்நிலையையும்  அனுசரித்து  செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.
 
உத்திரம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம்  தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
 
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவகிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா  நன்மைகளையும் உண்டாக்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி  14; பிப்ரவரி 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 1, 2, 3.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடகம் - தை மாதப் பலன்கள்