Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூன் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

Advertiesment
ஜூன் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்
, செவ்வாய், 1 ஜூன் 2021 (16:46 IST)
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

 
கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(அசா) - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் ராசிக்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
மிதுன ராசியினரே  இந்த மாதம் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். 
 
தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 
 
குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.
 
பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். 
 
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். 
 
மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. 
 
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
 
திருவாதிரை:
இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். . மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.
 
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்