Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

Advertiesment
ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்
, செவ்வாய், 30 ஜூன் 2020 (17:28 IST)
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன்  -  சுக ஸ்தானத்தில் ராஹூ, சூர்யன்  -  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி (வ) - லாப ஸ்தானத்தில்  குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்:
தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.
 
குடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.
 
தொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.
 
உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும். 
 
கலைத்துறையினர் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும். 
 
அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். 
 
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
 
மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. 
 
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். 
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
 
ரேவதி:
இந்த மாதம் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.
 
பரிகாரம்: ராமபிரானை வழிபாடு செய்வதாலும் அவரது நற்செயல்களை பின்பற்றி நடப்பதாலும், ராம நாமத்தை உச்சரிப்பதாலும் இன்னல்கள் இல்லாத இனிய வாழ்வை பெறலாம். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - சனி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்