Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

Advertiesment
ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்
, செவ்வாய், 30 ஜூன் 2020 (16:47 IST)
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் புதன், சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்  -   ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ)  - லாப ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்:
நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து பார் புகழ பணி செய்திடும் ரிஷபராசி அன்பர்களே இந்த மாதம் ஒளி நிறைந்த சிந்தனையும், தேஜஸ் நிறைந்த உடல் அமைப்பும் உண்டாகும். புகழைப் பெறுவதற்கு எந்த செலவையும் செய்ய உங்கள் மனம் துணிந்து விடும். புத்திரப்பேறு எதிர்பார்ப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். தெய்வ அருளைப் பூரணமாக பெற்று சுக வாழ்வு பெறுவீர்கள். பெண்களிடம் பண கொடுக்கல், வாங்கல் விசயங்களில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
 
குடும்பத்தில் கணவன், மனைவி குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆன்மிகம் தொடர்பான வழிபாடுகளில் புதிய ஈர்ப்பும் உண்டாகும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும். உணவு பழக்க வழக்கங்களில் தகுந்த கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.
 
தொழிலதிபர்கள் வெகு தூரத்திலிருந்து வரும் நபர்களால் தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தகுந்த தொழிற் பயிற்சிகளை கற்றுக் கொண்டால் வரும் காலங்களில் சிறப்புகள் பல பெறலாம். அண்ணன், அக்கா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். 
நல்ல நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
 
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம். காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.
 
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பைத் தரலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.
 
அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில்  சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.
 
பெண்கள் அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பதின் காரணமாக குடும்ப பாச புத்தகங்களை வலுப்பெற செய்வார்கள். நகையணிந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும்.
 
மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். முன்யோசனையுடன் நடந்து நற்பெயர் பெறலாம். 
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் சூழ்நிலை காரணமாக மனச் சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மன உளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது.
 
ரோகிணி:
இந்த மாதம் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.
 
பரிகாரம்: பெருமாள் கோயிலில் சுவாமிக்கு துளசி மாலையும், அம்பாளுக்கு வெண்மையான மலர்களால் ஆன மாலையும் சார்த்தி வழிபட துன்பங்கள் விலகி இன்பம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்