Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி 2022 - புத்தாண்டு பலன்கள்: மகரம்

Advertiesment
ஜனவரி 2022 - புத்தாண்டு பலன்கள்: மகரம்
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:49 IST)
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

 
மகர ராசி அன்பர்களே இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
 
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.
 
பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.
 
கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். 
 
உத்திராடம் 2, 3, 4:
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
 
திருவோணம்:
எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.   மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 
 
அவிட்டம் 1,2:
வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம்  மனஸ்தாபம் ஏற்படலாம்.
 
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 2022 - புத்தாண்டு பலன்கள்: தனுசு