Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்திகை மாத ராசி பலன்கள் 2022 - கும்பம்

Advertiesment
கார்த்திகை மாத ராசி பலன்கள் 2022 - கும்பம்
, வியாழன், 17 நவம்பர் 2022 (20:51 IST)
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ)  - சப்தம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது  - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
28-11-2022 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-11-2022 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்ப ராசியினரே நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் ராசியை செவ்வாய் பார்ப்பதால் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும்.

அரசியல் துறையினர் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். சூரியன் பத்தாமிடத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.

மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம்:
இந்த மாதம் செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

சதயம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

பூரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: நவ 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: டிச 09, 10, 11

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை மாத ராசி பலன்கள் 2022 - மகரம்