துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன்- பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றம்:
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
செலவுகளை சந்திக்கப் போகும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.
தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது.
உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகைசில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும்.
அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.
சுவாதி:
இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25