Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 22 April 2025
webdunia

பிப்ரவரி மாத பலன் - கும்பம்

Advertiesment
பிப்ரவரி
, வியாழன், 31 ஜனவரி 2019 (21:37 IST)
பிப்ரவரி மாத பலன் - கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
குறும்புத்தனம் அதிகம் கொண்ட  கும்ப ராசி அன்பர்களே,இந்த மாதம் அனைத்து கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும்.  பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிக்கனியினைப் பறிப்பார்கள்.

ஸதயம்:
இந்த மாதம் தொழில், வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் பெறுவீர்கள். பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருப்பதால் வீணான பழிச்சொல் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவி பொருளாதாரத் தடைகள் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சில நேரத்தில்  தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும்.  தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்து லாபம் குறையும். வரவேண்டிய ஆர்டர்களும் தடைப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் முன்னோர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி மாத பலன் - மகரம்