Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

டிசம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:36 IST)
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

 
கிரகநிலை:
ராசியில் சந்திரன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.
 
கிரகமாற்றங்கள்:
04-12-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
05-12-2021 அன்று சுக்ர பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
06-12-2021 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
28-12-2021 அன்று புதன் பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 
 
பலன்:
அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூற தயங்காத துலா ராசியினரே நீங்கள் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
 
தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
 
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். 
 
பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். 
 
கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.
 
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். 
 
சித்திரை 3, 4 பாதங்கள்: 
இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.
 
சுவாதி:
இந்த மாதம்  குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம்  அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.
 
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வணங்குவது சுபிட்சத்தை தரும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி