Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

Advertiesment
ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்
, புதன், 31 ஜூலை 2019 (15:54 IST)
ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 

கிரகநிலை:
சுகஸ்தானத்தில் புதன்,  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: 
கருத்து மோதல்கள் வந்து பின்பு சரியாகும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும் .  உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.  அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பூரட்டாதி 4 ம் பாதம்:
இந்த மாதம்  பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்கடங்கியிருப்பதால் கடந்தகால கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் பண விஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.  தேவையற்ற அலைச்சல்கள் குறையும். உற்றார்-உறவினர்களும் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

ரேவதி:
இந்த மாதம் தொழில், வியாபாரத்திலும் அவ்வளவாக ஏற்றமான பலனை எதிர்பார்க்க முடியாது என்றாலும் தேக்கநிலை அடையாது சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத இடமாற்றங்களால் அவதிக்குள்ளாவார்கள்.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்