கிரகநிலை:
ராசியில் புதன், குரு, சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
03.08.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். சமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்வீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலைகள் நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் திடீர் உடல்நல பாதிப்பு அகலும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும்.
குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் வார இறுதியில் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தை களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பயணங்கள் தாமதப்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரியதாமதமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை. அரசியல்துறையினருக்கு நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.
ம்ருகசீரிஷம்:
இந்த மாதம் திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும். உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள்.
திருவாதிரை:
இந்த மாதம் எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும்.
புனர்பூசம்:
இந்த மாதம் மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
பரிகாரம்: நவகிரகத்தில் புதனை வணங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 08, 09
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 17, 18