Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – கும்பம்

Advertiesment
Kumbam

Prasanth K

, வியாழன், 31 ஜூலை 2025 (17:01 IST)
அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில் சனி (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
25.08.2025  அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  புதன் களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பணவரவு இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதியநட்புகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அரசியல்துறையினருக்கு பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம்:
இந்த மாதம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

சதயம்:
இந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.

பூரட்டாதி:
இந்த மாதம் அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 08, 09

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! – மகரம்