Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாயம் தரும் ஆகஸ்டு மாத ராசிபலன், அதிர்ஷ்ட நாட்கள்! - கடகம்

Prasanth K
புதன், 30 ஜூலை 2025 (15:53 IST)
அதிர்ஷ்டம் தரும் மாதமான ஆகஸ்டு மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
03.08.2025  அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   ராசிக்கு  மாறுகிறார்.
17.08.2025  அன்று  ராசியில்  இருந்து  சூரியன் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
21.08.2025 அன்று சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.  
25.08.2025  அன்று  ராசியில்  இருந்து  புதன் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சுப பலன்கள் உண்டாகும். எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரம் மனோதிடத்தைத் தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

கணவன், மனைவிக்கிடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம்.  அரசியல்துறையினருக்கு காரியங்களில் வேகம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.

புனர்பூசம்:
இந்த மாதம் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.  உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.

பூசம்:
இந்த மாதம் கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

ஆயில்யம்:
இந்த மாதம் திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும்.

பரிகாரம்: சந்திரனை வணங்க குழப்பங்கள் நீங்கி மனதெளிவு உண்டா கும். பொருள் சேர்க்கை இருக்கும்

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 19, 20

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்