Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

Advertiesment
செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்
, சனி, 31 ஆகஸ்ட் 2019 (15:59 IST)
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில்  குரு, தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி (வ), கேது - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இறுக்கமான மனநிலையில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும்.  மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

குடும்பத்தில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.  கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல் ஆதரவு உண்டாகும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். கவலை வேண்டாம். சக பணியாளர்கள் உங்கள் வேலையை பங்கு போட்டு செய்வார்கள்.

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

விசாகம் - 4:
இந்த மாதம் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் அதிகளவில் இருக்காது.

அனுஷம்:
இந்த மாதம் திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை.

கேட்டை:
இந்த மாதம் பயணங்களால் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்