Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தாலும், பிற பெண்களுடன் தொடர்பு ஏற்படுவது ஏன்?

Advertiesment
மனைவி
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

ஜோதிடத்தில் ஏக தார (ஒரே மனைவி) ஜாதகங்கள், பல தார (பல மனைவிகள்) ஜாதகங்கள் உண்டு. ஒரு சிலர் முதல் திருமணம் முடித்தவுடன் அடுத்த ஆண்டே மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்வர். இவர்களுக்கு ஒரு திருமணத்தால் மனத்திருப்தி ஏற்படாது.

சமீபத்தில் என்னிடம் இதுபோன்றதொரு ஜாதகம் (பல மனைவிகள் உடையவர்) வந்தது. அவருக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். அவருக்கு லக்னத்திலேயே ஆண் கிரகங்களான குரு, செவ்வாய் வலுவாக இருந்தது. சந்திரனும் சேர்க்கை பெற்றிருந்தார்.

WD
அவருக்கு செவ்வாய் லக்னாதிபதி. அது லக்னத்திலேயே இருப்பதாலும், குருவும் லக்னத்தில் உள்ளதாலும் அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், 4ஆம் அதிபதியான சந்திரனும் லக்னத்திலேயே 2 யோக கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளதால் அவர் ஒழுக்க சீலராக விளங்க வேண்டும்.

மேலோட்டமாகப் பார்த்தால் இவருடையது மிக சிறப்பான ஜாதகம். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து முன்னேறி செல்வாக்கான நிலையை அவர் எட்டியிருந்ததால் தற்போது அவருக்கு காசு, பணத்தில் குறையில்லை.

ஆனால் லக்னத்தில் உள்ள செவ்வாய், குரு, சந்திரனின் சேர்க்கையை, 11ஆம் இடத்தில் உள்ள சனி (பாதகாதிபதி) பார்த்ததால், அவருக்கு காம இச்சை அதிகரித்துவிட்டது. இதனால் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உருவாகினர். இன்றைய தேதியில் அவருக்கு 3 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர். இதுமட்டுமின்றி வேறு சில பெண்களிடமும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதை அவரே ஒப்புக்கொண்டார்.

அவரது ஜாதகத்தில் போகஸ்தானத்திற்கு உரிய கிரகமான புதன், தனக்கு 12இல் மறைந்து சூரியனுடன் சேர்ந்துவிட்டார். இதனால் இவருக்கு போகம் தொடர்ந்து கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுக்கிரனுடன், ராகு இருந்ததால் (3வது வீட்டில்) நீண்ட நேரம் கலவி புரியும் ஆற்றலும் அவருக்கு இருந்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெண்களுடன் மட்டுமே தாம் தொடர்பு வைத்துக் கொள்வதாகவும், தாமாக யாரையும் பலவந்தப்படுத்துவதில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தைக் கூறினார்.

அவர் காமத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவராக இருந்தாலும், லக்னத்தில் சுபகிரகங்கள் இருப்பதால், விருப்பமில்லாத பெண்களுக்கு அவர் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இப்படி ஒருபுறம் நல்ல மனிதராகவும், மறுபுறம் பல பெண்களுடன் தொடர்புள்ளவராகவும் அவர் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

தற்போது 45 வயதைக் கடந்து விட்ட அவருக்கு இனி வரும் காலங்கள் சிறப்பாக இல்லை என்பதையும், பெண்கள் விடயத்தில் அவர் இனியும் கவனமாக இல்லாவிட்டால், பெண் பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்து அவமானப்படுவதுடன், தனது சொத்துக்களையும் இழக்க நேரிடும் என ஆலோசனை கூறி அனுப்பினேன்.

Share this Story:

Follow Webdunia tamil