Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலில் வெற்றி/தோல்வி என்பது கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
காதல்
, சனி, 28 நவம்பர் 2009 (18:39 IST)
மனித இனம் தோன்றிய காலம் முதல் காதல் உணர்வு மனிதர்களுக்கு இருப்பதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையா? இல்லையா? என்பது ஒருபுறம் இருந்தாலும், காதலில் வெற்றி/தோல்வி அடைவதற்கு நவகிரகங்களின் ஆதிக்கம்தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.

பெற்றோரால் மிகவும் பாசமாக, அதே சமயம் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட ஆண்/பெண் கூட ஒரு சில மாதங்களில் காதலில் விழுந்து அவசரத் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் பல ஆண்டுகளாக காதலித்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்து விடுகின்றனர். இதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளதா?

பதில்: காதல் என்பது முழுக்க முழுக்க மன எழுச்சி சம்பந்தப்பட்டது. அந்த மன எழுச்சியை ஏற்படுத்துவது கிரகங்கள். ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கத் தூண்டுவதும், ஒரு ஆணை பெண் பார்க்கத் தூண்டுவதும் சந்திரனும், சூரியனும்தான். இவை இரண்டும் கண்களுக்கு உரிய கிரகம். துவக்கத்தில் கண்கள் வழியாகவே காதல் ஏற்படுகிறது.

அதன் பின்னர் காதல்/காமத்தைத் தூண்டுவது சுக்கிரன். இதில் ஒழுங்கு நெறிமுறைகளை கொண்டு வருவது செவ்வாய் கிரகத்தின் வேலை. காதலித்தாலும் திருமணத்திற்கு பின்னரே சில விஷயங்களை மேற்கொள்வது என்று உறுதியுடன் பலர் இருக்கிறார்கள்.

காதலிக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று வீர வசனம் பேசுபவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் நேர்மறையாக இருக்கும். அதே செவ்வாய் எதிர்மறையாக இருந்தால் காதலை இழந்து தவிப்பார்கள்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்களின் பங்களிப்பு காதலுக்கு தேவைப்படுகிறது. இந்த கிரகங்களைக் கொண்டுதான் ஒருவரின் காதல் நிறைவேறுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதைக் கணிக்க முடியும். சிலரின் காதல், காமத்துடன் நிறைவு பெற்றுவிடுவதும் உண்டு.

இதுமட்டுமின்றி காதலிக்கும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஏழரைச் சனியில் காதலிப்பவர்கள் அந்தக் காலகட்டம் முடிந்தவுடன் பிரிந்து விடுகிறார்கள். இது அஷ்டமச் சனி காலகட்டத்திற்கும் பொருந்தும்.

Share this Story:

Follow Webdunia tamil