Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடவுளுக்கு அர்ப்பணிக்கக் கூடிய மலர்களைப் பற்றி விளங்குங்கள்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
மலர்கள்
, வியாழன், 22 அக்டோபர் 2009 (12:58 IST)
மல்லி, முல்லை ஆகிய மலர்கள் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது. பெரும்பாலான பெருமாள் கோயில்களில் சாமந்திப்பூ பயன்படுத்த மாட்டார்கள். காட்டுமல்லி என்ற பூவும் கோயில்களில் பயன்படுத்துவது கிடையாது.

முற்காலத்தில் கனகாம்பரம் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், தற்போது ‘கதம்பம’ என்ற பெயரில் அனைத்து பூக்களையும் ஒருங்கிணைத்து மாலையாக தயார் செய்து கோயிலுக்கு பயன்படுத்துகின்றனர்.

இதேபோல் பெரும்பாலான சிவாலயங்களில் தாழம்பூ தவிர்க்கப்படுகிறது. எனினும் காஞ்சி காமாட்சியம்மனுக்கு தாழம்பூ மிகவும் உகந்தது. ஒரு கோயில்களில் தவிர்க்கப்படும் புஷ்பங்கள், மற்றொரு புகழ்பெற்ற கோயிலில் பிரதான இடம் பிடிப்பதும் உண்டு. திருநிற்றுப்பச்சை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்கு ஏற்றவை.

சிவனுக்கு தும்பைப் பூவும், துர்க்கை, காளி, காமாட்சி ஆகிய கடவுள்களுக்கு விருட்சிப் பூவும் மிகவும் உகந்தவை. சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்த அபூர்வ மலர்களில் பல வகை, காலப்போக்கி அழிந்து விட்டது. அன்றலர்ந்த (அன்று மலர்ந்த) மலர்களே இறைவனுக்கு உகந்தவை.

இறைவனுக்கு மலர்களை சாத்தி வழிபடுவதன் உள்அர்த்தமே, அந்த மலர்களைப் போல் மென்மையான இதயத்துடனும், பிறர் வாழ்வில் (உதவிகள் செய்து) மணம் வீச செய்ய வேண்டும் என்பதே.

Share this Story:

Follow Webdunia tamil