Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் திருப்தி தரும்! - இன்றைய ராசி பலன்கள் (22.03.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, சனி, 22 மார்ச் 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று குடும்பத்தில் சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். எனவே பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணம் நல்ல வரனாக அமையும். வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்:
இன்று எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதைக்கு எந்த விதமான பங்கமும் வராது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மிதுனம்:
இன்று பொருளாதார நிலையில் சுமாரான நிலை இருக்கும். தொழிற்கல்வி பயில்வோர் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பிறதுறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தல் அவசியம். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பியது கிடைக்கவில்லை என கவலை கொள்ள வேண்டாம். கவனமுடன் உங்கள் கல்வியைத் தொடரவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:
இன்று கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்: 
இன்று பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி:
இன்று எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்: 
இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கல்லூரி, இன்ஷ்யூரன்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். இடமாற்றம் கிடைக்கும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிடவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்: 
இன்று உங்களது சேமிப்புகளை பெருக்கிக் கொள்ளுங்கள். தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு, கணவரிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:
இன்று குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமுடன் தங்களைக் கவனித்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்:
இன்று தேவை இல்லாத மனக் குழப்பத்திற்கும், வீணான பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் மூலம் குடும்பத்திற்கு அவப்பெயர் வராமலிருக்க அவர்களை கண்கானிப்பது அவசியம். சுபகாரியங்கள் தடைபடாமல் நடக்க தகுந்த பிரார்த்தனைகளை செய்ய வேண்டியது அவசியம். தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்:
இன்று சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவு வந்து சேரும். புதிய வழக்குகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். நிலம், வயல் ஏதேனும் வாங்க வேண்டி வந்தால் மனைவி பெயரிலும் அதை சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3

 
மீனம்:
இன்று திருடு போன பொருட்கள் வந்து சேரும். சொந்தமாக தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அரசாங்கம் மூலமாக கடன் வாங்கி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.  அரசியல், சமூக பொறுப்பில் உள்ளவர்கள் சுயநலம் பாராமல் உழைக்க வேண்யதிருக்கும். அதனால் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்! - இன்றைய ராசி பலன்கள் (21.03.2025)!