Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தட்டுப்பாடுகள் ஏற்பட்டு மறையும்! - இன்றைய ராசி பலன் (08.06.2024)!

astro

Prasanth Karthick

, சனி, 8 ஜூன் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிப்பீர்கள். உங்களது நற்செயல்கள் மூலம் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரத்து குறைவின்றி இருக்கும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் லாபமில்லாத ஆதாய மில்லாத வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓயாத உழைப்பும் குறைவான பலனும் ஏற்படும். வாழ்க்கை துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் மருத்துவ செலவும் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்படலாம் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளால் பெருமை சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மிதுனம்
இன்று நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைக்கும். அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து அதனால் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மறையும். எதைப்பற்றியாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

கடகம்
இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்
இன்று அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி
இன்று சொத்து விவகாரங்களில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். முக்கியநபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்க பெறலாம். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் எதிலும் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி வேகம் பிடிக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனவருத்தம் உண்டாகலாம்.  திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.  வீண் ஆசைகள் தோன்றலாம் கட்டுப்படுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

விருச்சிகம்
இன்று பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து உண்டாகும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

மகரம்
இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்
இன்று பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மீனம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும் பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலைகளை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்த மடையும் சம்பவங்கள் ஏற்படலாம்.  பிள்ளைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.  பண தேவை உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள்..!