Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும்! - இன்றைய ராசி பலன் (21.06.2024)!

Advertiesment
astro

Prasanth Karthick

, வெள்ளி, 21 ஜூன் 2024 (06:30 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்
இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள்.  எதிர்பார்த்ததைவிட லாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக லாபத்தை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்
இன்று உங்களைவிட்டு விலகியிருக்கும் பிள்ளைகள் வலிய வந்துசேர்வார்கள். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியம் இனிதே நடக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்தபடி மாறுதல் அடைவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்
இன்று குழந்தைப்பேறு இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் அடைவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்
இன்று தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு  பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9,3

சிம்மம்
இன்று வியாபாரத்தில் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள். இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். தூரத்திலிரிந்து அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9,3

கன்னி
இன்று உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும். பிள்ளைகளுக்கு நினைத்தபடி உயர்கல்வி அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்
இன்று தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9,3

விருச்சிகம்
இன்று வழக்குகள் வெற்றியைத் தரும். வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து  வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்தித்து வந்த தடை, தாமதங்கள் விலகிச்செல்லும். திருப்தியான பணவரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு
இன்று தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத்தும் விற்பனை ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம்
இன்று திருமணப் பேச்சுகள் கைகூடும். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் எண்ணம் ஈடேறும். வீடு மனை தொடர்பான அலுவல்கள் அனுகூலமாக அமையும். அரசியல் பிரமுகர்கள் தலைமையால் பாராட்டப்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்
இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல லாபத்தை அடைவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மீனம்
இன்று வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மன் கோவில்களில் ஆடிமாத முளைக்கட்டு திருவிழா