Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும்! - இன்றைய ராசி பலன் (23.07.2024)!

Advertiesment
astro

Prasanth Karthick

, ஞாயிறு, 28 ஜூலை 2024 (06:01 IST)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

 


மேஷம்
இன்று புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்
இன்று வியாபாரத்தில் நூதன யுக்திகளை புகுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்
இன்று பொறுப்புடனும் கவனத்துடனும்  செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். தாய் வழி உறவில் நன்மை வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்
இன்று தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு இன்று  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்
இன்று பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரியோர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின்  முயற்சிகள் தடைகளை தகர்த்து தாமதமின்றி வெற்றி கிடைக்கும். விளையாட்டில் சாதனைகளை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி
இன்று எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வெற்றி தரும். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்
இன்று புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்
இன்று மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்
இன்று அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்
இன்று புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடனை அடைக்க வேண்டுமா? இந்த கணேச மந்திரத்தை சொல்லுங்கள்..!