Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் அதிகரிக்கலாம்! - இன்றைய ராசி பலன்கள் (20.01.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, திங்கள், 20 ஜனவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று அழகிய வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். நண்பர்களிடம் கருத்து மோதல்களை தவிர்ப்பது அவசியம். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை பிரச்சனையின்றி வந்து சேரும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:
இன்று உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம்.    
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்:
இன்று உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:
இன்று சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.     
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்:
இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும்.   
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:
இன்று மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம். கேட்டால் மட்டும் உதவி செய்யுங்கள். உதவி கேட்காதவர்களுக்காக நீங்களாக யாருக்கும் உதவி செய்தல் கூடாது. உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்யலாம்.     
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்:
இன்று இருக்கும் பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்:
இன்று தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு:
இன்று உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்:
இன்று உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்:
இன்று வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மீனம்:
இன்று நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (19.01.2025)!