Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு நிதானம் அவசியம்! – இன்றைய ராசி பலன்கள்(03.03.2024)!

Advertiesment
astro

Prasanth Karthick

, ஞாயிறு, 3 மார்ச் 2024 (06:02 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாக  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே  வாக்குவாதங்கள்  உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ரிஷபம்:
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். மிக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன்  இருக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்:
இன்று பணவரத்து அதிகரிக்கும். ஆனாலும் வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் மீது  குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்:
இன்று அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. மேலிடத்தின் அனுசரனையால் திக்கு முக்காடிப் போவீர்கள். பெண்கள் முக்கிய பிரச்சினைகள் காரணமாக வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும்.மாணவர்கள் கல்வியில் ஊக்கம் பெறுவார்கள். பிடித்தனவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:
இன்று எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். தொழிலதிபர்களுக்கு வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உற்பத்தி பெருகும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள்  விலகிச்செல்வார்கள். வியாபாரம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:
இன்று கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பிள்ளைகள் மூலம் மனக்கஷ்டம் ஏற்பட்டு நீங்கும். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் தயவும் பாராட்டும் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் ஆரோக்கியம் கூடுதலாகும். உங்களைப் பிரிந்திருந்த உறவுகள் வந்துசேர்வார்கள். சில  இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி  செய்யும்போது கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு வெளியில் தங்க நேரிடும். அதிகமான பிரயாணங்களால் சோர்வு ஏற்படலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள்  ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

விருச்சிகம்:
இன்று வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை. ஆனாலும் பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை  அனுசரித்து செல்வது நல்லது.  கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உற்றார்-உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த எதிரிகள்  விலகிச்செல்வார்கள். வாகனம் வாங்கும் திட்டம் நினைத்தபடி நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு:
இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தேர்விற்கு மனதை சிதற விடாமல் சிரத்தை எடுப்பது நன்மை தரும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் நன்மையுண்டு. எதிர்பாலினரால் லாபம்  கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்:
இன்று காரிய தடை நீங்கும். எதிர்ப்புகள் அகலும். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் தேடிவரும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மந்தநிலை மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கும்பம்:
இன்று தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளின் மதிப்பு உயரும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். புதிய வேலைகள் மேலிடத்திலிருந்து கிடைக்கும். அதற்கான  ஊதியமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வந்துசேரும். சிலர் ஆர்டர் நிமித்தம் வெளிநாடு  சென்று வருவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேகானந்தரின் அமெரிக்க பயணமும் உலகம் முழுவதும் ஏற்பட்ட புரட்சியும்..!