Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 25/09/2020

Advertiesment
இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 25/09/2020
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (04:00 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.
 
மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.
 
ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பேச்சின் இனிமை சாதூரியத்தால்  எளிதில் காரியங்கள் கைகூடும்.
 
மிதுனம்:
 
இன்று மிதுனம் ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு  உண்டாகும்.
 
கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த  வேலைகளை முடித்து பாராட்டு பெறுவார்கள். 
 
விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிலும் திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும்.
 
தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிலை பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா..?