இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்
இன்று உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணம் உண்டாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் அதிகளவில் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
ரிஷபம்
இன்று திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மிதுனம்
இன்று பயணங்களால் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
சிம்மம்
இன்று எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
கன்னி
இன்று கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்-உறவினர்களால் சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். லருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகமும் அதற்கு அரசுவழியில் உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
துலாம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களும் அபரிதமான லாபத்தைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலிலும் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
விருச்சிகம்
இன்று உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நற்பலனைத்தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
தனுசு
இன்று தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகள் நிலவும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலைகள் நிலவுவதால் லாபம் குறைந்து பொருள்தேக்கம் ஏற்படும். கூட்டாளிகளிடையே ஒற்றுமையற்ற நிலையே நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மகரம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கும்பம்:
இன்று தேவையற்ற பழிச்சொல் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகநேரிடும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
மீனம்:
இன்று உடல் அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்துமுடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும். கணவன்-மனையியிடையே உண்டாகக் கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்