Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (02-12-2023)!

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (02-12-2023)!
, சனி, 2 டிசம்பர் 2023 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

 
மேஷம்:
இன்று நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 5, 8

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 7,8

மிதுனம்:
இன்று கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்யமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: வெளிர் பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்:
இன்று பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 8, 9

சிம்மம்:
இன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

கன்னி:
இன்று விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பணவரவுகளும் சுமாராகவே இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

துலாம்:
இன்று கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

விருச்சிகம்:
இன்று திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.  எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். செலவும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 5

தனுசு:
இன்று மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

மகரம்:
இன்று உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும்.
அதிர்ஷ்டநிறம்: பிரவுன், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 4, 3

கும்பம்:
இன்று சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்:  4, 5

மீனம்:
இன்று காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலையில் படி பூஜைக்கு 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது..!