Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-07-2022)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-07-2022)!
, சனி, 2 ஜூலை 2022 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

 மேஷம்:
இன்று எதிர்பார்த்த பதவிகளைப் பெற முடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரினை எடுக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். விவசாயிகளுக்கு சிறப்பான மகசூல் உண்டாகும். மழை வளமும் மண் வளமும் விளைச்சலுக்கு கை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3 

ரிஷபம்:
இன்று புதிய நவீனகரமான பொருட்களை வாங்கி விளைச்சலையும் பெருக்கிக் கொள்ள முடியும். புதிய பூமி நிலம் வாங்ககூடிய வாய்ப்பும் உண்டாகும். கால் நடைகளாலும் நல்ல லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 

மிதுனம்:
இன்று கல்வி ரீதியாக மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மேலும் ஊக்கமளிப்பதாக அமையும். நண்பர்களின் ஆதரவு நற்பலன்களை உண்டாக்கும். எதிலும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்:
இன்று குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும். கடந்த காலத்திலிருந்த சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் யாவும் விலகி நல்ல தீர்வு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும்; உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெற முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய யோகமும் உண்டாகும்;.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:
இன்று நினைத்த காரியங்கள் நிறைவேறும். தேவையற்ற அலைச்சல்,டென்சன் ஏற்படுமே தவிர தொழில் உத்தியோக ரீதியாக வெற்றிகள் தொடர்ந்தபடி இருக்கும்.பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்:
இன்று கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இதனால் சாதகமான பலன்களைப் பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. நல்ல நட்புகளால் அனுகூலப்பலனையும் பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 

விருச்சிகம்:
இன்று பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய பூமி மனை, வண்டி வாகனம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் தடையின்றி கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட லாபங்கள் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

தனுசு:
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கலும் லாபம் தரும். மாணவர்கள் கல்வியில் சற்றே ஈடுபாட்டுடன் செயல்படுவதும் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்:
இன்று உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 

கும்பம்:
இன்று தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 

மீனம்:
இன்று உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் அனுகூலமாகவே அமைவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்ன தெரியுமா...?