Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (31-03-2022)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (31-03-2022)!
, வியாழன், 31 மார்ச் 2022 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 5

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும் பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்த மடையும் சம்பவங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

மிதுனம்:
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 7

கடகம்:
இன்று அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 1, 6, 9

சிம்மம்:
இன்று வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

கன்னி:
இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். வரவை போலவே செலவும் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 5, 9

துலாம்:
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 2, 7

விருச்சிகம்:
இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. குடும்ப பிரச்சனை தீரும்.தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5

தனுசு:
இன்று வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். கலைத்துறையினருக்கு தொழிலில் முயிற்சி செய்து முன்னேறுவீர்கள். அரசியல்துறையினருக்கு செய்த முயற்சிகளில் வெற்றியாகத்தான் அமையும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9

மகரம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.குடும்பத்தில் உள்ளவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். எப்போதும் விழிப்புடன் இருக்கும் நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தைரியம் அதிகரிக்கும்
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5, 9

கும்பம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட எண்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 2, 5, 7

மீனம்:
இன்று தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாத சிவராத்திரியில் கடைப்பிடிக்கவேண்டிய வழிபாட்டு முறைகள் !!