Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-03-2022)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-03-2022)!
, ஞாயிறு, 20 மார்ச் 2022 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும்.உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 2, 5, 7

ரிஷபம்:
இன்று திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். அதேவேளையில் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9

மிதுனம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

கடகம்:
இன்று வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். 
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 5, 9

சிம்மம்:
இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.
அதிர்ஷ்ட எண்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட நிறம்: 1, 4, 6

கன்னி:
இன்று உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 1, 6, 9

துலாம்:
இன்று மனை, வீடு சம்பந்தமாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற உடையவர்களுக்கு நல்ல வாகனம் அமையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 7

விருச்சிகம்:
இன்று பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான வேலைகளில் நிறைய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆர்டர்கள் எளிதில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமாக அவற்றை நிறைவு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

தனுசு:
இன்று உங்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் கனிவான பார்வை உங்களின் மீது விழும். உங்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். ஏற்கனவே எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட நிறம்: 2, 5

மகரம்:
இன்று குடும்பத்தை விட்டு பிரிந்திருந்து வேலை பார்த்தவர்கள் தற்போது குடும்பத்தினரிடம் மீண்டும் சேர வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

கும்பம்:
இன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆனாலும் தாய் வழி உறவினர்களுடன் சற்று ஒதுங்கி யிருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும்.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5, 9

மீனம்:
இன்று உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-03-2022)!