Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-10-2021)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-10-2021)!
, திங்கள், 25 அக்டோபர் 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:
இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.   எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:
இன்று மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் அனைத்திலும் நன்மையே நடக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு  பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:
இன்று குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் பல நல்ல அனுகூலம் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான  பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும்.  
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:
இன்று வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். பணத்தை நல்ல முறையில் சேமிப்பீர்கள். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:
இன்று மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:
இன்று பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்:
இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 

கும்பம்:
இன்று அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (24-10-2021)!