Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-04-2021)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-04-2021)!
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். பல நற்செயல்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைவீர்கள். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

ரிஷபம்:
இன்று இளைய சகோதர, சகோதரிகளால் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். அவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். அவர்களால் சிறிது செலவும் உண்டாகலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9

மிதுனம்:
இன்று குழந்தைகள் வகையிலும் பூர்வ சொத்துக்களாலும் வருமானம் உண்டு. பூமி, மனை, நிலங்கள் தொடர்பானவற்றில் இருந்த எதிர்ப்புகள் மாறி அனுகூலமான பலன் கிட்டும். தொழில் ரீதியாக எதிரிகள் முடங்கிப் போவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கடகம்:
இன்று நண்பர்கள் வகையில் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம். அவர்களை விட்டு சற்று ஒதுங்கியே நில்லுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3

சிம்மம்:
இன்று குடும்பத்துடன் தெய்வ வழிபாடு நடத்தும் வாய்ப்புகள் உருவாகும். உடலில் சில நோய்க்கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளதால் உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

கன்னி:
இன்று சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். ஆதாயமாக வரும் பணம் முழுவதையும் சேமிக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு, அரசுத்துறை ஊழியர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியில் மிகுந்த கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

துலாம்:
இன்று தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு நினைப்பதைவிட அதிகமாக சம்பள உயர்வும், பாராட்டும், பரிசும் கிட்டும். மனதில் தைரியம் உண்டாகும். தனக்குக்கீழ் உள்ள ஊழியர்களுக்கும் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி சம்பள உயர்வை பெற்றுத் தருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5

விருச்சிகம்:
இன்று உத்தியோக உயர்வு, இடமாற்றம், புது வீடு வாங்குதல், புதிய வாகனம் வாங்குதல் ஆகிய பலனகள் நடக்கும். உங்களின் லட்சிய பயணத்தில் பிறரின் குறுக்கீடு இன்றி வெற்றிநடை போட தெய்வ சக்தி துணை நிற்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு:
இன்று குடும்பத்தில் உள்ள நீண்டகால பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திடீரென சுபச்செலவு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

மகரம்:
இன்று தொழிலில் வளம் காண்பீர்கள். வாகன கூடுதல் ஆர்டர் கிடைக்கும். தொழிற்சாலை பணிகளை மேற்பார்வையிட செல்லும் போது தகுந்த பாதுகாப்பை மேற்கொள்ளுதல் அவசியம். மனதில் உற்சாகமும், செயல் திறனும், அதிகரிக்கும். அரசு தொழில் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்போர் அனுகூலமான பலன் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7

கும்பம்:
இன்று புத்திர வகையில் புகழும் பெருமையும் உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும்.  அழகு சாதன பொருள் உற்பத்தி செய்வோர் மேன்மை பெறுவர். எதிரிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

மீனம்:
இன்று தொழிலில் கிடைக்கும் ஆதாயம், தொழில் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிட்டும். புத்திரர்கள் வகையில் சுபச் செலவுகள் உண்டாகும். கூடுதல் லாபம் கிடைக்கும். உணவுப்பொருள் விற்பனையில் உள்ளவர்கள் விற்பனை அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (18-04-2021)!