Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-04-2020)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-04-2020)!
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 7

ரிஷபம்
இன்று அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம்   செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மிதுனம்
இன்று வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  பெறுவீர்கள். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள்   சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள  வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்
இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும்.  யோகா, ப்ராணாயாமம்  போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன  வளத்தையும்  பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி   நலமடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்
இன்று உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம்   வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். .எதிர் பாலினத்தாரால்  லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கன்னி
இன்று பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட்   துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்: 5

துலாம்
இன்று வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல்   அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக   இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா
அதிர்ஷ்ட எண்: 2, 3

விருச்சிகம்
இன்று கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது   நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு
அதிர்ஷ்ட எண்: 1, 2

தனுசு
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு   உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும்.  பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்
இன்று மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள  வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். உழைப்பு மட்டுமே   நன்மைகளைக் கொடுக்கும் என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்
இன்று ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு   தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது   கவனம் தேவை. தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும்.  செல்வம் சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரம் கடந்து உழைத்து சில பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்
இன்று வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பார்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவில் கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன...?