Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-03-2020)!

Advertiesment
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-03-2020)!
, புதன், 4 மார்ச் 2020 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

ரிஷபம்:
இன்று எல்லாவிதமான சவால்களையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது சிறப்பு. இக்காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும்,
ஒற்றுமையும் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, சிவப்பு 
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 , 7

மிதுனம்:
இன்று பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டநிறம்: கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்:
இன்று உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற
எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

சிம்மம்:
இன்று வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

கன்னி:
இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும். நினைத்த காரியங்களை
நிறைவேற்றமுடியாது.
அதிர்ஷ்டநிறம்: பிரவுன், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5

துலாம்:
இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழநிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். 
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2,6,8

விருச்சிகம்:
இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டாலும் ஞாபக மறதி, மந்தநிலை ஏற்படும். இதனால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

தனுசு:
இன்று வீண்கவலை ஏற்பட்டு நீங்கும்.சோதனையான காலமாகும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

மகரம்:
இன்று செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும்.நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும்.
அதிர்ஷ்டநிறம்: கருநீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று திருமண சுபகாரியங்கள்கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும்.
அதிர்ஷ்டநிறம்: ஊதா, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

மீனம்:
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் 
அதிர்ஷ்ட எண்: 2, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வ கிரக தோஷ நிவாரண பரிகாரம்...!!